திருச்சியைச் சேர்ந்த கலை-இலக்கிய ஆளுமையான பேராசி ரியர் எஸ்.ஆல்பர்ட் (81) நேற்று முன்தினம் பெங்க ளூருவில் காலமானார்.
பேராசிரியர் ஆல்பர்ட், திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் ஆங்கிலப் பேராசி ரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். எழுத்தாளர், திரைப்பட- இலக்கிய விமர்சகர், நாடக இயக்குநராகச் செயல்பட்டுள்ளதுடன் நூற்றுக்கணக்கான சிறுகதை, கவிதைப் பயிலரங்கு களை நடத்தியவர். இவரது பங்களிப்பைக் கவுரவிக்கும் வகையில் ‘பேராசிரியர் எஸ்.ஆல்பர்ட்’ என்கிற நூலை எஸ்.அற்புதராஜ் தொகுத்திருக்கிறார்.
திருச்சியைச் சேர்ந்த பல்துறை ஆளுமைகளுக்கு வழிகாட்டியாகவும் எஸ்.ஆல்பர்ட் திகழ்ந்தார். எழுத்தாளர்கள் இமையம், நாகூர் ரூமி, ‘வெளி’ ரங்கராஜன், கோ.ராஜாராம், திரைப்பட இயக்குநர்கள் அம்ஷன் குமார், ஜே.டி.ஜெர்ரி, பேராசிரியர்-சமூகவியல் ஆய்வாளர் ராஜன்குறை, நாட்டார் வழக்காற்றியல் ஆய்வாளர் எம்.டி.முத்துக்குமாரசாமி உள்ளிட்டோர் இவரின் மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.