Regional02

புதுக்கோட்டை அருகே இளைஞர் கொலையில் - பொதுப்பணித்துறை அலுவலர் உட்பட 8 பேர் மீது வழக்கு :

செய்திப்பிரிவு

புதுக்கோட்டை அருகே இளைஞர் கொலை வழக்கில் பொதுப்பணித் துறை பாசன ஆய்வாளர் உட்பட 8 பேர் மீது திருக்கோகர்ணம் போலீஸார் நேற்று வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டம் மணமேல் குடி அருகே கூத்தாடிவயல் ஏரியில் பொக்லைன் இயந்திரங்களைக் கொண்டு கடந்த 2019-ல் சவுடுமண் அள்ளும் பணி நடைபெற்றது. அப்போது, இப்பணியில் ஈடுபட்டிருந்த தூத்துக்குடி மாவட்டம் வைகுண்டம் பகுதியைச் சேர்ந்த மாரியப்பன் மகன் இசக்கிமுத்து(23) கொலை செய்யப்பட்டார்.

இந்த வழக்கில், சக பணியாளர்களான திண்டுக்கல் மாவட்டம் பேயம்பட்டி சின்னையா மகன் முத்துராஜா(31), சாணார்பட்டி செல்லாண்டி மகன் கருப்பசாமி(28), சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள செவ்வூர் அய்யாவு மகன் பொன்னையா(22) ஆகியோர் மீது மணமேல்குடி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

மண் அள்ளும் பணிக்கு தனது உறவி னரான இசக்கிமுத்துவை வைகுண்டம் பகுதியைச் சேர்ந்தவரும், பொதுப்பணித் துறையின், புதுக்கோட்டை மாவட்டம் நாகுடி பிரிவு பாசன ஆய்வாளருமான ஆர்.வெங்கடேஷ்(43) அழைத்து வந்தி ருந்ததால், இந்த கொலை தொடர்பாக அவர் போலீஸில் புகார் அளித்திருந்தார்.

இதுதொடர்பான வழக்கில், புதுக் கோட்டை மாவட்ட அமர்வு நீதிமன்றத் தில் நேற்று முன்தினம் ஆஜரான பொன் னையா, தனது அண்ணன் விஜயகுமா ருடன் மோட்டார் சைக்கிளில் ஊருக்கு சென்றுகொண்டிருந்தார்.

அப்போது, புதுக்கோட்டை அருகே செல்லுக்குடி பகுதியில் சென்ற இவர் களை வழிமறித்து 3 பேர் சரமாரியாக வெட்டியுள்ளனர். அதில், விஜயகுமார் அந்த இடத்திலேயே உயிரிழந்தார். பொன்னையா தப்பியோடிவிட்டார்.

இது குறித்து திருக்கோகர்ணம் போலீஸார் வழக்கு பதிவு செய்து, இவ் வழக்கில் தொடர்புடைய பொதுப்பணித் துறை அலுவலர் வெங்கடேஷ், வைகுண்டம் பகுதியைச் சேர்ந்த மாரியப்பன் உட்பட 8 பேர் மீது நேற்று வழக்கு பதிவு செய்து, சிலரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT