Regional01

கரோனா விழிப்புணர்வு பணி :

செய்திப்பிரிவு

தென்காசி மாவட்டம், செங்கோட்டையில் நகராட்சி ஊழியர்கள், வருவாய்த்துறையினர் இணைந்து கரோனா விழிப்புணர்வு பணியில் ஈடுபட்டனர். உதவி திட்ட அலுவலர் சங்கரநாராயணன், செங்கோட்டை வட்டாட்சியர் ரோசன்பேகம், நகராட்சி ஆணையாளர் நித்யா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

முகக்கவசம் அணிவதன் அவசியம், தனிமனித இடைவெளியை கடைபிடிப்பது, தூய்மையை பேணுவது, சத்தான உணவு உட்கொள்வது குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும், கரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகள் முறையாக பராமரிக்கப்படுகிறதா என்பதை ஆய்வு செய்தனர். .

SCROLL FOR NEXT