தமிழக சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்கு தடை விதிக்கக் கோரி, தூத்துக்குடியில் புதிய தமிழகம் கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தூத்துக்குடி விவிடி சந்திப்புஅருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு அக்கட்சியின் மாநில பொதுச் செயலாளர் வி.கே.அய்யர் தலைமை வகித்தார்.
தமிழகத்தில் ஏப்ரல் 6-ம் தேதிநடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பணம் பட்டுவாடா பெருமளவில் நடைபெற்றுள்ளதால், மே 2-ம் தேதி நடைபெறும் வாக்கு எண்ணிக்கைக்கு தடைவிதிக்க வேண்டும். சட்டப்பேரவைத் தேர்தலில் பணம் பட்டுவாடா நடைபெற்றது குறித்து விசாரணை கமிஷன் அமைத்து விசாரிக்க வேண்டும். தமிழகத்தில் 6 மாதங்களுக்கு குடியரசுத்தலைவர் ஆட்சியை அமல்படுத்திவிட்டு, மீண்டும் தேர்தல் நடத்தவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கனகராஜ், மன்சூர் அலி, செல்லத்துரை, நகரச் செயலாளர் ரமேஷ் மற்றும் பலர் பங்கேற்றனர்.