வண்ணார்பேட்டை எப்எக்ஸ் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற வளாக நேர்காணலில் தேர்வு பெற்ற மாணவ, மாணவியருக்கான பணி நியமன ஆணைகளை ஸ்காட் கல்வி குழுமங்களின் தலைவர் கிளிட்டஸ்பாபு வழங்கினார். 
Regional03

எப்.எக்ஸ். பொறியியல் கல்லூரியில் - 876 மாணவர்களுக்கு பணிநியமன ஆணை :

செய்திப்பிரிவு

திருநெல்வேலி வண்ணார் பேட்டை எப்எக்ஸ் பொறியியல் கல்லூரியில் படித்த 876 மாணவ, மாணவியருக்கு பல்வேறு நிறுவனங்களின் பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டன. இந்த பணிநியமன ஆணைகளை ஸ்காட் கல்வி குழுமங்களின் தலைவர் கிளிட்டஸ்பாபு வழங்கினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கல்லூரி வளாகத்தில் 113 தொழில்நிறுவனங்கள் நேர்காணலை நடத்தி தகுதியான 876 பேரை பணிகளுக்கு தேர்வுசெய்துள்ளன. தற்போது பணிநியமன ஆணைகளை பெற்றுள்ளவர்கள் ஆண்டுக்கு ரூ.3 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரையில் வருமானம் பெறுவார்கள். மேலும் 18 முன்னணி தொழில் நிறுவனங்கள் வளாக நேர்முகத் தேர்வினை வரும் வாரங்களில் நடத்துவதற்கு ஒப்புக்கொண்டுள்ளன. இந்த ஆண்டு அகில இந்திய தொழில்நுட்பக் கழகம் நடத்திய கல்லூரி மற்றும் தொழில் நிறுவனங்கள் இடையிலான தொடர்பு சார்ந்த கணக்கெடுப்பில் இந்திய அளவில் எப்எக்ஸ் பொறியியல் கல்லூரிக்கு பிளாட்டினம் தரவரிசை கிடைத்துள்ளது. மாணவ மாணவியர்க்கு வரும் கோடை விடுமுறையில் திறன்மேம்பாடு மற்றும் வேலை வாய்ப்பு சார்ந்த பயிற்சிகள் சிறந்த முன்னணி நிறுவனங்கள் மூலம் வழங்கப்பட உள்ளது என்று தெரிவித்தார்.

ஸ்காட் குழுமங்களின் நிர்வாக இயக்குநர் அருண்பாபு, செயல் இயக்குநர் மெனான்டஸ் ஆகியோர் மாணவ மாணவிகளை பாராட்டினர்.

ஸ்காட் குழுமங்களின் பொது மேலாளர் (வளர்ச்சி) மு.ஜெயக்குமார், துணைப்பொது மேலாளர் எஸ்.கிருஷ்ணகுமார், கல்லூரி முதல்வர் ஏ.வேல் முருகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

SCROLL FOR NEXT