கே.வி.குப்பம் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால் புதிய தேர்தல் அலுவலரை நியமிக்க மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் பரிந்துரை செய்துள்ளார்.
வேலூர் மாவட்டத்தில் உள்ள 5 சட்டப்பேரவைத் தொகுதிகளுக் கான தேர்தல் நடந்து முடிந்த நிலையில் வரும் மே 2-ம் தேதி வாக்குகள் எண்ணப்படவுள்ளன.
இதற்கான பயிற்சி வகுப்புகள் முடிந்த நிலையில் இறுதிக்கட்ட ஆயத்தப் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.
கரோனா தொற்று உறுதி
இதையடுத்து, கே.வி.குப்பம் தொகுதிக்கு புதிய தேர்தல் நடத்தும் அலுவலரை நியமிக்க தேர்தல் ஆணையத்துக்கு மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும் வேலூர் மாவட்ட ஆட்சியருமான சண்முகசுந்தரம் பரிந்துரை கடிதம் அனுப்பியுள்ளார்.
தேர்தல் ஆணையத்துக்கு பரிந்துரை