ஆரணியில் பள்ளி மாணவியை கடத்திச் சென்ற வட மாநில இளைஞரை காவல் துறையினர் கைது செய்தனர்.
தி.மலை மாவட்டம் ஆரணி அருகே உள்ள ஒரு கிராமத்தில் வசிப்பவர் பிளஸ் 1 மாணவி. இவர், தனியார் நூற்பாலையில் பணியாற்றி வந்துள்ளார். மாணவி கடந்த 24-ம் தேதி பணிக்கு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.
இதுகுறித்து பெற்றோர் அளித்த புகாரின் பேரில் ஆரணி கிராமிய காவல் துறையினர் நடத்திய விசாரணையில், மாணவியை நூற்பாலையில் பணியாற்றி வந்த ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த அணில்(21) என்பவர் கடத்தி சென்று திருப்பூரில் வைத்திருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, மாணவி மீட்கப்பட்டார். இது குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து அணிலை கைது செய்து சிறையில் அடைத்தனர்.