கரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதன் காரணமாக கர்நாடக மாநிலத்தில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையொட்டி, வேலூர் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள கர்நாடக போக்குவரத்து தகவல் மையம் மூடப்பட்டுள்ளது. படம்: வி.எம்.மணிநாதன். 
Regional03

கர்நாடக மாநிலத்தில் முழு ஊரடங்கு - பெங்களூருவுக்கு அரசு பேருந்துகள் நிறுத்தம் :

செய்திப்பிரிவு

கர்நாடக மாநிலத்தில் முழு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளதால் வேலூர் மாவட்டத்தில் இருந்து பெங்களூருவுக்கு இயக்கப்படும் 38 அரசுப் பேருந்துகள் நிறுத்தப் பட்டன.

கர்நாடக மாநிலத்தில் கரோனா இரண்டாம் அலை தொற்று புதிய உச்சத்தை தொட்ட நிலையில், வேறு வழியின்றி 14 நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அம்மாநில முதல்வர் எடியூரப்பாவின் அறிவிப்பைத் தொடர்ந்து நேற்று இரவு முதல் வரும் மே மாதம் 10-ம் தேதி வரை முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என தெரிவிக்கப் பட்டுள்ளது.

இது தொடர்பாக வேலூர் மண்டல அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறும்போது, ‘‘கர்நாடக மாநிலத்தில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால் வேலூரில் இருந்து பெங்களூரு வுக்கு இயக்கப்படும் 38 தமிழக அரசு பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன.

நேற்று பிற்பகல் 1 மணிக்குப் பிறகு பெங்களூரு வுக்கு எந்த பேருந்துகளும் இயக்கப்படவில்லை. பொதுமக்களின் தேவைக்காக ஓசூர் வரை மட்டுமே பேருந்துகள் இயக்கப்படும்’’ என தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT