கரோனா வைரஸ் தொற்று தற்போது2-ம் அலையாக உருவெடுத்து, உலகெங்கும் வீரியமாகவும், வேகமாகவும் பரவி வருகிறது. கரோனாவின் முதல் அலையில், இந்தியாவின் மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழகத்தில் பாதிப்பு குறைவு. இதற்கு சித்த மருந்தான‘கபசுரக் குடிநீர்’ பங்கு என்ன என்பதை உலகுக்கு தெரியப்படுத்தியதுடன், கபசுரக் குடிநீரை தமிழகத்தின் பட்டிதொட்டிகளில் எல்லாம் மக்களிடம் கொண்டு சேர்த்தனர் சித்த மருத்துவர்கள்.
தமிழகத்தில் கபசுர குடிநீரால் மட்டுமே கரோனா கட்டுக்குள் வந்தது என அநேக ஆட்சியர்கள் சான்றளித்தனர். ஆனால் காலப்போக்கில்அலட்சியமும், அரசின் வழிகாட்டுதல்களைக் கடைபிடிப்பதில் காட்டிய கவனக்குறைவுமே தற்போது கரோனா தொற்று அதிகரிக்க வழிவகுத்துள்ளது.
இந்நிலையில், கரோனா தொற்றில் இருந்து பாதுகாக்க மிகவும் பயன்படும் கடுக்காய் ஊறல் நீர், சீந்தில் பால், ஆயுஷ் குடிநீர், நெல்லிக்காய் தேனூறல், இஞ்சி கற்பம்,துளசி நீர் ஆகிய 6 சித்த மருந்துகள்பற்றியும் அதன் செய்முறைகள்குறித்தும் விளக்குகிறார் தாம்பரம்சானடோரியத்தில் உள்ள தேசியசித்த நிறுவனத்தின் (மருத்துவமனை) குணபாடம் துறை இணைபேராசிரியர் மருத்துவர் ச.சிவகுமார்.
கடுக்காய் ஊறல் நீர்
சீந்தில் பால்
ஆயுஷ் குடிநீர்
நெல்லிக்காய் தேனூறல்
இஞ்சி கற்பம்
துளசி நீர்
இதுபோன்ற சித்தவைத்திய மருந்துகளுடன், அரசின் வழிகாட்டுதலான முகக் கவசம் அணிதல், தனி மனித இடைவெளியைக் கடைபிடித்தல், கைகளை அடிக்கடி கழுவுதல், மூச்சுப் பயிற்சி செய்தல், ஆவி- வேது பிடித்தல், மஞ்சள் - உப்பு கலந்த நீரில் கொப்பளித்து வாய், தொண்டையை சுத்தம் செய்தல், சத்தான உணவுகளை உண்ணுதல், கபசுரக் குடிநீர் பருகுதல் போன்றவழிமுறைகளைக் கடைபிடிப்பதன் மூலம் நம்மையும், நம்மைச் சார்ந்தவர்களையும் கரோனாவில் இருந்துகாப்பாற்ற முடியும். இவ்வாறு மருத்துவர் சிவகுமார் தெரிவித்தார்.