கோவை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 1,056 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. 3 பேர் உயிரிழந்துள்ளனர் எனசுகாதாரத் துறையினர் தெரிவித்தனர். இதுதொடர்பாக மேலும் அவர்கள் கூறும்போது “மாவட்டத்தில் மொத்தம் 3.51 லட்சம் பேருக்குஇதுவரை தடுப்பூசி செலுத்தப் பட்டுள்ளது.
அரசு, தனியார் மருத்துவமனை களில் நேற்று மாலை நிலவரப்படி மொத்தம் 21,200 தடுப்பூசிகள் இருப்பில் உள்ளன. கோவை அரசு மருத்துவமனை, சிங்காநல்லூரில் உள்ள இஎஸ்ஐ மருத்துவமனை, 42 தனியார் மருத்துவமனைகள், கரோனா சிகிச்சை மையங்களில் மொத்தம் 6,047 பேர் சிகிச்சையில் உள்ளனர். கரோனாவால் பாதிக்கப்பட்ட வர்கள் சிகிச்சை பெற ஏதுவாக மாவட்டத்தில் மொத்தம் 8,075படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன.
முகக்கவசம் அணியா தவர்கள், சமூக இடைவெளியை பின்பற்றாத நிறுவனங்களுக்கு காவல் துறை, வருவாய் துறை, சுகாதாரத் துறையினர் மூலம் நேற்று ரூ.1.51 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது” என்றனர்.