திருப்பூர்: தமிழகத்தில் கரோனாவின் தாக்கம் மீண்டும் அதிகரித்து வருவதால், பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. இருப்பினும், கரோனா தொற்று பாதிப்பு குறைந்தபாடில்லை. திருப்பூர் மாவட்டத்தை பொறுத்தவரை கடந்த சில நாட்களாக கரோனா தொற்று எண்ணிக்கை 400-ஐ நெருங்கியுள்ளது. இந்நிலையில், திருப்பூர் மாவட்டத்தில் நாளொன்றுக்கு 3,000 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. சேகரிக்கப்படும சளி மாதிரி, திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்படுகிறது. இங்கு பரிசோதனை முடிவுகள் தெரிவிக்கப்படுகின்றன. கரோனா தொற்று உறுதி செய்யப்படுகிறவர்களுக்கு, உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டு வருகிறது.