Regional03

நாயை அடித்துக் கொன்ற இருவர் கைது :

செய்திப்பிரிவு

கோவை: கோவை ரத்தினபுரியைச் சேர்ந்தவர் பிரதீப்(32). தேசிய விலங்குகள் நல வாரியத்தின், கோவை மாவட்ட அலுவலராக உள்ளார். இவர், கோவை பீளமேடு போலீஸில் அளித்த புகாரில்,‘‘பீளமேடு எல்லைத் தோட்டம் சாலையைச் சேர்ந்த பாலசுந்தரம்(65) என்பவரின் வீடு அருகே தெருநாய் ஒன்று வளர்ந்துவந்தது. அதே பகுதியில் கட்டிடத் தொழிலாளியாக பணியாற்றிவரும் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த மிதுன்(22) என்பவர் மூலம், பாலசுந்தரம் இந்த நாயை அடித்துக் கொன்றுள்ளார். இருவர் மீதும் வழக்கு பதிந்து விசாரிக்க வேண்டும்’’ எனக் கூறியிருந்தார். இதுதொடர்பாக விசாரணை நடத்திய பீளமேடு போலீஸார் மிருகவதை தடுப்புச் சட்டம், விலங்குகளை கொடுமைப்படுத்துதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து, இருவரையும் நேற்று கைது செய்தனர்.

SCROLL FOR NEXT