Regional01

டாஸ்மாக் பார்கள் மூடல் சேலத்தில் அதிகாரிகள் ஆய்வு :

செய்திப்பிரிவு

கரோனா தொற்று பரவலை தடுக்கும் விதமாக ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கும் மற்றும் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை இரவு நேர ஊரடங்கும் அமலில் உள்ள நிலையில், புதிய கட்டுப்பாடுகளை அரசு அறிவித்துள்ளது.

புதிய கட்டுப்பாடுகள் நேற்று முதல் அமலுக்கு வந்தது. இதில், மது கூடங்களை மூட உத்தர விட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் 220 டாஸ்மாக் மதுபான கடை களில் 68 கடைகளில் பார்கள் உள்ளன. பார்கள் நேற்று முதல் மூடப்பட்டது. பார்கள் மூடப் பட்டிருப்பது தொடர்பாக சேலம் மாவட்ட டாஸ்மாக் மேலாளர் அம்பாயிரநாதன் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

சேலம் பால் மார்க்கெட் சாலையில் உள்ள இரு டாஸ்மாக் பார்களுக்கு சென்ற அதிகாரிகள் பார்கள் மூடப்பட்டிருப்பதை உறுதி செய்தனர். மேலும், டாஸ்மாக் கடைகளில் கரோனா தடுப்பு விதிமுறைகள் பின்பற்றப் படுவதையும் உறுதி செய்தனர். தொடர்ந்து காடையாம்பட்டி, ஓமலூர், மேட்டூர் உள்ளிட்ட பகுதிகளிலும் ஆய்வு மேற்கொண்டனர்.

இதுதொடர்பாக டாஸ்மாக் அதிகாரிகள் கூறும்போது, “அரசு உத்தரவின்படி கரோனா தொற்று பரவலை தடுக்கும் விதமாக சேலம் மாவட்டத்தில் உள்ள 68 பார்களும் மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளன.அரசின் மறு உத்தரவு வரும் வரை பார்கள் திறக்கப்படாது. பார்கள் மூடப்பட்ட நிலையில், சந்து கடைகளில் மது விற்பனை செய்யப்படுகிறதா என்பது தொடர்பாக ஆய்வு செய்து காவல் துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றனர்.

SCROLL FOR NEXT