Regional01

ஊரடங்கு விதிகளை மீறியதாக 193 பேர் மீது வழக்கு :

செய்திப்பிரிவு

விருதுநகர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் ஊரடங்கை மீறியதாக 193 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா 2-வது அலையைக் கட்டுப்படுத்தும் வித மாக நேற்று முன்தினம் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. வீட்டைவிட்டு பொதுமக்கள் வெளியே வரவும், சாலைகளில் திரியவும், வாகனப்போக்கு வரத்துக்கும் தடை விதிக்கப்பட் டிருந்தது.

அவசர மற்றும் அத்தியாவ சியத் தேவைகளுக்காகவும், மருத்துவமனைகள், மருந்தகங் களுக்குச் சென்றவர்களையும் போலீஸார் அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.

ஆனால், தேவையின்றி வாகனங்களில் சுற்றி வந்ததாக அருப்புக்கோட்டை, விருதுநகர், சாத்தூர், சிவகாசி, ராஜபாளை யம், வில்லிபுத்தூர் பகுதிகளில் 193 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

SCROLL FOR NEXT