பறிமுதல் செய்யப்பட்ட நகைகள். 
Regional01

தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட 4 இளைஞர்கள் கைது : 22 பவுன் நகைகள் பறிமுதல்

செய்திப்பிரிவு

மதுரை கூடல்புதூர் அருகே சிலையனேரி பகுதியில் சில நாட்களுக்கு முன்பு ஒரு பெண்ணிடம் 6 பவுன் நகை வழிப்பறி செய்யப்பட்டது. தபால் தந்தி நகர் மல்லிகை தெருவில் ஒரு பெண்ணிடம் 9 பவுனும், விளாங்குடி விவேகானந்தர் தெருவில் பெண்ணிடம் 9 பவுனும் பறித்துச் சென்றனர். இதையடுத்து காவல் ஆணையர் உத்தரவின்பேரில், இன்ஸ்பெக்டர் பெத்ராஜ் தலைமையில் தனிப் படையினர் விசாரணை நடத்தினர்.

இந்நிலையில் திருப்பாலை பகுதியில் 2 நாட்களுக்கு முன்பு வாகனச் சோதனையில் சந்தேகத்துக்கிடமாக 4 பேர் சிக்கினர்.

அவர்களிடம் சோதனை நடத்தியதில் 22 பவுன் நகை வைத்திருந்தனர். அவர்கள் திருப்புவனம் அருகிலுள்ள லாடனேந்தல் மந்தை தெருவைச் சேர்ந்த ராஜசேகர் (20), அவரது உறவினர் கார்த்திக் (20), திருப்பாலை சிக்கந்தர் அலி (22), கடச்சனேந்தல் தண்ணீர் தொட்டி பகுதி முருகானந்தம் (21) எனத் தெரிந்தது.

மேலும் அவர்கள் வழிப்பறிக் கொள்ளையர் எனத் தெரிய வந்ததால் 4 பேரும் கைது செய்ய ப்பட்டனர்.

அவர்களிடம் இருந்த 22 பவுன் பறிமுதல் செய்யப்பட்டது. இதில் ராஜசேகர் மீது ஏற்கெனவே வழக்குகள் இருப்பதும், அவருடன் மூவரும் சேர்ந்து வழிப்பறியில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

SCROLL FOR NEXT