Regional02

3 ஊழியருக்கு கரோனா தொற்று திருவாடானை ஒன்றிய அலுவலகம் மூடல் :

செய்திப்பிரிவு

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து இங்கு பணியாற்றும் இரண்டு அலுவலக ஊழியர்களுக்கு நேற்று தொற்று உறுதியானது.

இதையடுத்து அலுவலகம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு மூடப்பட்டது. வரும் 30-ம் தேதி வரை அலுவலகம் மூடப்படுவதாக அலுவலர் ஒருவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT