Regional01

சேலத்தில் 428 பேருக்கு கரோனா தொற்று உறுதி :

செய்திப்பிரிவு

சேலம் மாவட்டத்தில் நேற்று 428 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

சேலம் மாவட்டத்தில் கரோனா தொற்றினால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை கடந்த சில வாரங்களாக ஒவ்வொரு நாளும் படிப்படியாக அதிகரித்து வந்தது. நேற்று முன்தினம் கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நடப்பாண்டில் முதன்முறையாக அதிகபட்சமாக 511-ஐ தொட்டது.

இந்நிலையில், நேற்று 428 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில், சேலம் மாநகராட்சி பகுதியில் 229 பேர், ஓமலூரில் 35 பேர், ஆத்தூரில் 17 பேர், பனமரத்துப்பட்டியில் 16 பேர், சங்ககிரியில் 15 பேர், வாழப்பாடி, காடையாம்பட்டியில் தலா 11 பேர், தாரமங்கலம், எடப்பாடியில் தலா 10 பேர், வீரபாண்டி, நங்கவள்ளியில் தலா 9 பேர், பெத்தநாயக்கன்பாளையத்தில் 8 பேர், தலைவாசல், அயோத்தியாப் பட்டணத்தில் தலா 6 பேர், மேட்டூரில் 5 பேர் பாதிக்கப்பட்டனர்.

இதனிடையே, தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் மொத்த எண்ணிக்கை 3,444 ஆக அதிகரித்துள்ளது. நேற்று சிகிச்சையில் இருந்த 381 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.

SCROLL FOR NEXT