சலூன்களை திறக்க அனுமதி வழங்க வலியுறுத்தி, சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த சேலம் மண்டல முடித்திருத்தும் தொழிலாளர்கள். படம்: எஸ்.குரு பிரசாத் 
Regional01

சலூன்களை திறக்க அனுமதிக்க வேண்டும் : முடிதிருத்தும் தொழிலாளர்கள் மனு

செய்திப்பிரிவு

நேரக் கட்டுப்பாட்டுடன் சலூன் களை திறக்க அனுமதி அளிக்க வேண்டும் என சேலம் மண்டல முடிதிருத்தும் தொழிலாளர்கள் சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

கரோனா தொற்று பரவலை தடுக்க புதிய கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த கட்டுப்பாடுகள் நேற்று அமலுக்கு வந்தது. புதிய கட்டுப்பாடுகளில் மாநகராட்சி மற்றும் நகராட்சிப் பகுதிகளில் சலூன்கள் இயங்க அனுமதியில்லை.

இந்நிலையில், நேற்று சேலம் மண்டல முடிதிருத்தும் தொழி லாளர்கள் திரளாக வந்து சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர். இது தொடர்பாக அவர்கள் கூறியதாவது:

முதல்கட்ட கரோனா பரவலின் போது முழுமையான ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது, முடிதிருத்தும் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. இதனால், கடன் தொல்லை ஏற் பட்டுள்ளது. அரசு அறிவித்த ரூ.2,000 ஒரு சிலருக்கு மட்டுமே கிடைத்தது. தற்போது, சலூன்களை மூட அரசு உத்தரவிட்டுள்ளதால், எங்கள் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப் படும். எனவே, கரோனா விதிகளை முழுமையாக பின்பற்றும் எங்களுக்கு, நேரக் கட்டுப்பாட்டுடன் சலூன்களை திறக்க அனுமதி அளிக்க வேண்டும்.

ஈரோடு

இதேபோல் நாமக்கல் மாவட்ட அழகுக் கலை நிபுணர்களும் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

கிருஷ்ணகிரி

SCROLL FOR NEXT