திருச்சியில் 398 பேருக்கும், தஞ்சாவூரில் 300 பேருக்கும், திருவாரூரில் 75 பேருக்கும், நாகையில் 177 பேருக்கும், கரூரில் 114 பேருக்கும், புதுக்கோட்டையில் 123 பேருக்கும், பெரம்பலூரில் 24 பேருக்கும், அரியலூரில் 43 பேருக்கும் நேற்று புதிதாக கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
கரோனா பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் திருச்சியில் 324, கரூரில் 153, திருவாரூரில் 131, தஞ்சாவூரில் 172, நாகையில் 270, புதுக்கோட்டையில் 93, பெரம்பலூரில் 13, அரியலூரில் 27 என 1,183 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.
கரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் தஞ்சாவூ ரில் 4, திருச்சியில் 3, திருவாரூரில் 2, கரூர், நாகப்பட்டினம், பெரம்பலூரில் தலா ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.