Regional01

ஏடிஎம் இயந்திரத்தில் கேட்பாரற்று கிடந்த - ரூ.10 ஆயிரத்தை போலீஸில் ஒப்படைத்த இளைஞர்கள் :

செய்திப்பிரிவு

பெரம்பலூரில் ஏடிஎம் இயந்திரத் தில் கேட்பாரற்று கிடந்த ரூ.10 ஆயிரத்தை போலீஸில் ஒப்படைத்த இளைஞர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் எதிரில் உள்ள வணிக வளாகத்தில் உள்ள ஸ்டேட் வங்கி ஏடிஎம் இயந்திரத்தில் நேற்று காலை புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் வட்டம் நல்லதங்காள்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சரண்ராஜ் மகன் பிரவீன்(23) பணம் எடுக்க சென்றுள்ளார். அப்போது, ஏடிஎம் இயந்திரத்தில் ரூ.10 ஆயிரம் பணம் இருந்துள்ளது. இதையறிந்த, பிரவீன் தனக்கு பிறகு ஏடிஎம்மில் பணம் எடுக்க காத்திருந்த பெரம்பலூர் புதிய மதனகோபால புரத்தைச் சேர்ந்த காளியப்பன் மகன் அன்பழகன்(29) என்பவ ரிடம் அந்த பணத்தை கொடுத்து, அதை போலீஸில் ஒப்படைக் கும்படி கேட்டுள்ளார்.

இதையடுத்து, அன்பழகன் அந்த பணத்தை பெரம்பலூர் காவல் நிலையத்தில் ஒப்படைத் தார்.

ஏடிஎம் இயந்திரத்தில் கேட்பாரற்று கிடந்த பணத்தை எடுத்து போலீஸில் ஒப்படைத்த இளை ஞர்கள் பிரவீன், அன்பழகன் ஆகி யோரை பெரம்பலூர் போலீஸார் மற்றும் பொதுமக்கள் பாராட்டினர்.

SCROLL FOR NEXT