Regional02

கரொனா தொடர்பான சந்தேகங்களை தெரிந்துகொள்ள கட்டணமில்லா தொலைபேசி எண்கள் அறிவிப்பு :

செய்திப்பிரிவு

பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள் கரோனா தொடர்பான சந்தேகங்களை தெரிந்துகொள்ள கட்டணமில்லா தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ஸ்ரீ வெங்கட பிரியா தெரிவித்துள்ளது:

கரோனா தொற்று சம்மந்தமாக ஏற்படும் சந்தேகங்களை பொதுமக்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டுப்பாட்டு அறையில் உள்ள 1077, 91541 55097 மற்றும் 1800 4254556 ஆகிய கட்டணமில்லா தொலைபேசி எண்களை தொடர்புகொண்டு தெரிந்துகொள்ளலாம். கூடுதல் விவரங்களுக்கு 104 என்ற கட்டணமில்லா தொலைபேசியையும் தொடர்புகொள்ளலாம்.

பொதுமக்கள் யாருக்காவது சளி, இருமல், காய்ச்சல், வயிற்றுப்போக்கு, வாந்தி மற்றும் சுவை அறியாத தன்மை, மூச்சுத்திணறல் போன்ற அறிகுறிகள் இருந்தால், அவர்கள் உடல் நலனில் அலட்சியம் காட்டாமல் உடனே அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவமனைகளை அணுக வேண்டும். அங்கு அவர்களுக்கு கரோனா சம்மந்தமான அனைத்து பரிசோதனைகளும் இலவசமாக செய்து, தேவையான சிகிச்சை அளிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT