Regional02

வீட்டுக்கு வெளியே தூங்கிய பெண்ணிடம் 5 பவுன் சங்கிலி பறிப்பு :

செய்திப்பிரிவு

பெரம்பலூர் மாவட்டம் கோனேரிபாளையம் கிழக்குத் தெருவில் வசித்து வருபவர் அண்ணாதுரை மனைவி அலமேலு(38). அண்ணாதுரை வெளிநாட்டில் வேலைபார்த்து வருகிறார். கோடைவெப்பம் காரணமாக நேற்று முன்தினம் இரவு அலமேலு தனது மகன், மகள் ஆகியோருடன் வீட்டுக்கு வெளியே படுத்து தூங்கிக் கொண்டிருந்தார்.

நள்ளிரவில் சட்டை அணியாமல் டவுசர் அணிந்து வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர், அலமேலு அணிந் திருந்த 5 பவுன் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பியோடி விட்டார். இதுகுறித்து பெரம் பலூர் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT