Regional01

விபத்தில் லாரி ஓட்டுநர் உயிரிழப்பு :

செய்திப்பிரிவு

தென்காசி: தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரம் அருகே உள்ள மேலப் பட்டமுடையார் புரத்தைச் சேர்ந்தவர் பிரதீபன் (28). லாரி ஓட்டுநர். இவரது மனைவி கீர்த்தி (24). இவர்களுக்கு கடந்த 20 நாட்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது.

இந்நிலையில், பிரதீபன் இருசக்கர வாகனத்தில் பாவூர்சத்திரத்துக்கு சென்றுவிட்டு, ஊருக்கு திரும்பிச் சென்று கொண்டிருந்தார். மகிழ்வண்ணநாதபுரம் அருகே சென்றபோது, எதிரே வந்த இருசக்கர வாகனம் மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த பிரதீபன், தென்காசி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர், மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து பாவூர்சத்திரம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT