Regional01

ஆக்சிஜன் தேவை குறித்து ஆய்வு செய்ய சிறப்புக் குழு :

செய்திப்பிரிவு

திருநெல்வேலி மாவட்டத்தில் கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள், ஆக்ஸிஜன் இருப்பு மற்றும் தேவை குறித்த ஆலோசனைக் கூட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

கூட்டத்துக்கு ஆட்சியர் விஷ்ணுதலைமை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.பெருமாள் முன்னிலை வகித்தார். கூட்டத்தில், “திருநெல்வேலி மாவட்டத்தில் கரோனா வைரஸ் நோய் தடுப்புநடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழக அரசு வழிகாட்டுதலின்படி அரசு விதித்துள்ள வழிமுறைகள் மாவட்ட நிர்வாகத்தின மூலம் முழுமையாக அமல்படுத்தப்பட்டு வருகிறது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் தற்போதைய நிலையில் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏதும் இல்லை” என்று தெரிவிக்கப்பட்டது.

திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, அரசுமருத்துவமனைகள், கரோனா சிறப்பு சிகிச்சை மையங்கள் மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு தேவைப்படும் ஆக்சிஜன் போதுமான அளவு இருப்பு உள்ளதா? என்பதையும், தேவை குறித்தும், ஆய்வு செய்து அறிக்கையை திருநெல்வேலி மாவட்ட ஆட்சியரிடம்தெரிவிக்க மாவட்ட நிர்வாகம்மூலம் சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.

இக்குழுவில் வேளாண்மைத் துறை இணை இயக்குநர், கூட்டுறவுத்துறை இணைப்பதிவாளர் ஆகியோர் சிறப்புக் கண்காணிப்பு அலுவலர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. கூட்டத்தில், ஒழுங்கு நடவடிக்கை ஆணையர் எம்.சுகன்யா,துணை ஆட்சியர் (பயிற்சி) மகாலெட்சுமி, நாங்குநேரி வட்டாரமருத்துவ அலுவலர் வெங்கடேஷன், இந்திய மருத்துவக் கழக மருத்துவர்கள் பிராசிஸ் ராய், இப்ராஹிம், அன்புராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT