தூத்துக்குடியில் நடைபெற்ற வாக்கு எண்ணிக்கை தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட தேர்தல் அலுவலரான ஆட்சியர் கி.செந்தில் ராஜ் பேசினார். 
Regional03

வாக்கு எண்ணும் பணியிலுள்ள அனைவருக்கும் பரிசோதனை அவசியம் : தூத்துக்குடி ஆட்சியர் அறிவுறுத்தல்

செய்திப்பிரிவு

வாக்கு எண்ணும் மையத்தில் பணியாற்றும் அனைவரும் கரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என, தூத்துக்குடி மாவட்ட தேர்தல் அலுவலரான ஆட்சியர் கி.செந்தில் ராஜ் வலியுறுத்தினார்.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பான ஆலோசனைக்கூட்டம் மாவட்ட தேர்தல்அலுவலரான ஆட்சியர் கி.செந்தில்ராஜ் தலைமையில் நேற்று நடைபெற்றது. ஆட்சியர் பேசியதாவது:

சட்டப்பேரவை பொதுத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையின்போது கரோனா தொற்று பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொள்ள வேண்டும். வாக்குஎண்ணும் மையத்தில் பணியில் ஈடுபடும் அனைவரும் கரோனாபரிசோதனை மேற்கொள்ள வேண்டும். வாக்கு எண்ணிக்கைக்கு வரும் வேட்பாளர்களின் முகவர்கள்சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் நுழைவு வாயில்களில் தடுப்புகள் அமைக்க வேண்டும். முகவர்கள் கட்டாயம் முககவசம் அணிந்து வர வேண்டும். உள்ளே வரும் வழியில் சானிடைசர் பயன்படுத்தி கைகளை சுத்தப்படுத்த அறிவுறுத்த வேண்டும். காய்ச்சல் உள்ளதா என்பதையும் கண்டறிய வேண்டும் என்றார் ஆட்சியர்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார், தூத்துக்குடி சார் ஆட்சியர் சிம்ரன் ஜீத் சிங்காலோன், மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான் ஆகியோர்முன்னிலை வகித்தனர். கோட்டாட்சியர்கள் சங்கரநாராயணன் (கோவில்பட்டி), தனப்ரியா (திருச்செந்தூர்), மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் மாரியப்பன், மாவட்ட வழங்கல் அலுவலர் அபுல்காசிம், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் பரிமளா, உதவி ஆணையர் (கலால்) செல்வநாயகம், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் தேவி, சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர் போஸ்கோராஜா, தேர்தல் வட்டாட்சியர் ரகு மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

SCROLL FOR NEXT