Regional02

கட்டுரை போட்டியில் வெற்றி பெற்ற : மாணவருக்கு பரிசு :

செய்திப்பிரிவு

தண்டராம்பட்டில் கரோனா விழிப்புணர்வு கட்டுரை போட்டி யில் வெற்றி பெற்ற மாணவருக்கு பரிசு வழங்கப்பட்டது.

கரோனா கால கதாநாயகர்கள் எனும் தலைப்பில் குறுவள மைய அளவிலான கட்டுரைப் போட்டி தி.மலை மாவட்டம் தண்டராம்பட்டு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இதில், 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். இந்த போட்டியில் தண்டராம்பட்டு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் பத்தாம் வகுப்பு மாணவர் நவீன் முதலிடம் பிடித்தார்.

இதையடுத்து, பள்ளி மாணவருக்கு 'டேப்' பரிசாக வழங்கி தலைமை ஆசிரியர் ரவி பாராட்டினார்.

SCROLL FOR NEXT