சேலம் மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் நேற்று 99 டிகிரி ஃபாரன்ஹீட் பதிவானது.
சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்த கோடை மழை காரணமாக, வெயிலின் தாக்கம் சற்று தணிந்திருந்தது. நேற்று முன்தினம் 98 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவான நிலையில், நேற்று 99 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவானது. இதனிடையே, சேலம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் சில இடங்களில் கோடை மழை பெய்தது.
மாவட்டத்தில் அதிகபட்சமாக சங்ககிரியில் 14 மிமீ மழை பதிவானது. மாவட்டத்தில் பிற பகுதியில் பெய்த மழை அளவு (மில்லி மீட்டரில்) விவரம்: சேலம் 7.80, கரியகோவில் 5, ஆத்தூர் 4.20, ஆனைமடுவு, ஏற்காடு, ஓமலூர் தலா 4 மிமீ மழை பதிவானது.