Regional02

- ஈரோட்டில் ஊரடங்கு நாளில் மதுபானம் விற்ற 3 பேர் கைது : ,772 மதுபாட்டில்கள் பறிமுதல்

செய்திப்பிரிவு

ஊரடங்கு நாளான நேற்று கோபி மற்றும் சத்தியமங்கலம் பகுதியில் சட்டவிரோதமாக மதுபானங்களை விற்ற ஒரு பெண் உட்பட மூவர் கைது செய்யப்பட்டனர். சத்தியமங்கலம் அருகே கள் விற்பனை செய்த இருவர் கைது செய்யப்பட்டனர்.

கரோனா ஊரடங்கு காரணமாக நேற்று டாஸ்மாக் மதுபானக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், கோபியை அடுத்த பங்களாபுதூர் லட்சுமிநகர் பாரதி வீதியில் சட்டவிரோதமாக மதுவிற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற போலீஸார், மது விற்பனை செய்த ராஜா (51), பிரதாப் (30) ஆகியோரை கைது செய்தனர். மேலும் அவர்கள் பதுக்கி வைத்திருந்த1527 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

அதேபோல் சத்தியமங்கலம் காவல்நிலையத்திற்குட்பட்ட வடவள்ளி பகுதியில் உள்ள கோழி இறைச்சிக்கடையில் மதுபானங்களை விற்பனை செய்த சுந்தரா (55) என்ற பெண்ணை போலீஸார் கைது செய்தனர் அவரிடம் இருந்து 245 மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

சத்தியமங்கலம் காவல்நிலையத்திற்குட்பட்ட ராஜன் நகர் கோவில் தோட்டத்தில் போலீஸார் நடத்திய சோதனையில் கள்ளத்தனமாக விற்பனை செய்ய வைத்திருந்த100 லிட்டர் கள் பறிமுதல் செய்யப்பட்டது. கள் விற்பனை செய்த பழனிசாமி (60), அய்யாசாமி (50) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

SCROLL FOR NEXT