சேலம் காமலாபுரம் விமான நிலையத்தில் தீயணைப்பு துறை சார்பில் பாதுகாப்பு மற்றும் தீத்தடுப்பு ஒத்திகை நடந்தது.
கோடை காலத்தில் தீ விபத்து ஏற்படுவதை தடுக்கவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் பாதுகாப்பை உறுதி செய்ய தேவையான விழிப்புணர்வு நடவடிக்கையை தீயணைப்பு துறை மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதன் ஒருபகுதியாக சேலம் காமலாபுரம் விமான நிலையத்தில் தீயணைப்பு வீரர்கள், ஓடுதளத்தில் தீத்தடுப்பு ஒத்திகையை மேற்கொண்டனர்.
இதில், விமான ஓடுதளத்தில் அவசரகாலங்களில் மேற்கொள்ள வேண்டிய பணிகள், தீ விபத்துகள் ஏற்பட்டால் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தண்ணீர் பீய்ச்சி அடித்தல், நுரையுடன் கூடிய தண்ணீர் கொண்டு தீ தடுப்பு செய்முறை விளக்கங்களை தீயணைப்பு வீரர்கள் அளித்தனர்.