திண்டுக்கல்லில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்காக சிறப்பு கண்காணிப்புக் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.
திண்டுக்கல் கிழக்கு வட்டாட்சியர் சரவணன் தலைமையில் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் குருசாமி, வருவாய் ஆய்வாளர் ரஞ்சித்குமார், சுகாதார ஆய்வாளர் செபாஸ்டின், கிராம நிர்வாக அலுவலர்கள் வெங்கடேஷ், திருமால் ஆகியோர் கொண்ட கண்காணிப்பு குழுவினர் சோதனையில் ஈடுபட்டனர். திண்டுக்கல் நகரில் உள்ள திரையரங்குகள், வணிக நிறுவனங்களை ஆய்வு செய்தபோது, சில நிறுவனங்கள் விதிகளை மீறி செயல்பட்டது தெரியவந்தது. கரோனா கட்டுப்பாடுகளை பின்பற்றாத 6 நிறுவனங்களுக்கு மொத்தம் ரூ.21 ஆயிரத்து 200 அபராதம் விதிக்கப்பட்டது.