Regional03

கிணற்றில் மூழ்கி மாணவர் உயிரிழப்பு :

செய்திப்பிரிவு

திண்டுக்கல் அருகே நண்பர்களுடன் கிணற்றில் குளிக்கச் சென்ற மாணவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

திண்டுக்கல் அருகே கோபால்பட்டியைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் ஜெயபாலன் மகன் லோகேஸ்வரன் (17). பிளஸ் 2 படித்து வந்தார். இவர், தனது நண்பரான சரண் என்பவரின் பிறந்தநாளை கொண்டாட நண்பர்களுடன் திண்டுக்கல் வந்துள்ளார். திண்டுக்கல் அருகே என்.எஸ்.நகர் பகுதியில் உள்ள கிணற்றில் நண்பர்கள் குளித்துள்ளனர். இதில் நீச்சல் தெரியாததால் லோகேஸ்வரன் கிணற்று நீரில் மூழ்கினார். தீயணைப்பு நிலைய வீரர்கள், லோகேஸ்வரனின் உடலை மீட்டனர். தாடிக்கொம்பு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT