Regional02

வாளால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய இளைஞர் கைது :

செய்திப்பிரிவு

தூத்துக்குடி அருகே வாளால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய இளைஞர் கைது செய்யப்பட்டார்.

தூத்துக்குடி அருகேயுள்ள திரவியபுரத்தைச் சேர்ந்த மனோகரன் என்பவரின் மகன் மணிகண்டன். இவர் அங்குள்ள ஆர்.சி. கிறிஸ்தவ ஆலயம் அருகில், தனது 19-வது பிறந்தநாளை கடந்த 22-ம் தேதி நண்பர்களுடன் கொண்டாடியுள்ளார். அப்போது, பிறந்தநாள் கேக்கை நீண்ட வாளால் வெட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. சம்பந்தப்பட்டோரை கைது செய்யகாவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உத்தரவிட்டார். புதுக்கோட்டை காவல் நிலைய ஆய்வாளர் மீனா வழக்குப் பதிவு செய்து, மணிகண்டனை கைது செய்தார். கேக் வெட்ட பயன்படுத்திய வாள் பறிமுதல் செய்யப்பட்டது.

பிறந்தநாள் நிகழ்ச்சியில் பங்கேற்ற மணிகண்டனின் நண்பர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

SCROLL FOR NEXT