பாபநாசம் ஒன்றியத்தில் கரோனா பரவல் அதிகரித்ததன் காரணமாக, 5 கிராமங்கள் தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள் ளன.
தஞ்சாவூர் மாவட்டம் பாப நாசம் ஒன்றியத்தில் உள்ள கோபுராஜபுரம், ராஜகிரி, பசுபதி கோவில், கணபதி அக்ர ஹாரம், கீழகபிஸ்தலம் ஆகிய கிராமங்களில் 25 பேருக்கு மேல் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, 25 பேரும் நேற்று முன்தினம் 108 ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, சிகிச்சை அளிக் கப்பட்டு வருகிறது. மேலும், கரோனா பரவல் தடுப்பு நடவடிக் கையாக அந்த 5 கிராமங்களும் தடைசெய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.
தொடர்ந்து, அங்கு மருத்துவ முகாம், கிருமிநாசினி தெளிக்கும் பணி, வீடு வீடாகச் சென்று பிளீச்சிங் பவுடர் தெளிக்கும் பணி, கரோனா பரிசோதனைக்காக சளி மாதிரி எடுக்கும் பணி ஆகியவை நடைபெற்று வரு கின்றன. இப்பணியின்போது, வீடுகள்தோறும் தலா 200 கிராம் பிளீச்சிங் பவுடர் வழங்கப் பட்டது.
மேலும், இப்பகுதி மக்கள் வெளியில் நடமாட வேண்டாம் எனவும், வெளிநபர்கள் கரோனா பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு வர வேண்டாம் எனவும் சுகாதாரத் துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டது.
இந்த கிராமங்களில் வட்டார மருத்துவ அலுவலர் நவீன்குமார், பாபநாசம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜம், ரமேஷ்பாபு, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் பாஸ்கரன், சுகாதார ஆய்வாளர்கள் செல்லப்பா, நாடிமுத்து, சாமிநாதன், ஊராட்சி மன்றத் தலைவர்கள் கண்ணன், சுமதி குணசேகரன், நடராஜன், சரவணன் மற்றும் ஊராட்சி செயலாளர்கள் ஆய்வு மேற்கொண்டு, கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.