நாகர்கோவில் ஸ்காட் கல்லூரியில் உள்ள கரோனா மையத்தில் சிகிச்சை பெறுவோருக்கு உணவு விநியோகம் செய்யும் மாநகராட்சி பணியாளர்கள். 
Regional02

நெல்லையில் 549 பேருக்கு கரோனா : குமரியில் எம்.பி. உட்பட 183 பேர் பாதிப்பு

செய்திப்பிரிவு

தென்காசி மாவட்டத்தில் நேற்று 261 பேருக்கு கரோனா கண்டறியப்படது. இதனால், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10, 912 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 112 பேர் உட்பட இதுவரை 9 ஆயிரத்து 333 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது 1,407 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ஒருவர் உயிரிழந்தார். இதனால், மாவட்டத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 172 ஆக உயர்ந்துள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் நேற்று 549 பேருக்கு கரோனா தொற்றுகண்டறியப்பட்டது. இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 21 ஆயிரத்து 299 ஆக அதிகரித்துள்ளது. நேற்று 175 பேர் உட்பட இதுவரை 17 ஆயிரத்து 599 பேர்குணமடைந்துள்ளனர். தற்போது 3 ஆயிரத்து 71 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தூத்துக்குடி

கன்னியாகுமரி

அதிமுக மாநிலங்களவை உறுப்பினர்விஜயகுமார் கரோனா தொற்று ஏற்பட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

கடந்த வாரம் டெல்லி சென்ற இவர், பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். பின்னர் கடந்த 16-ம் தேதி டெல்லியில் கரோனா பரிசோதனை செய்தபோது அவருக்கு தொற்று இல்லை. இந்நிலையில் நாகர்கோவில் வந்திருந்த எம்.பி.க்குகாய்ச்சல் மற்றும் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவருக்குகரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் தொற்று உறுதி செய்யப்பட்டது. எம்.பி.யின் குடும்பத்தினர் மற்றும்அவருடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT