Regional03

தூத்துக்குடி மாவட்டத்தில் - இன்று காய்ச்சல் சிறப்பு முகாம்கள் :

செய்திப்பிரிவு

தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் இன்று (ஏப்.26) காய்ச்சல் பரிசோதனை சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

அதன் விவரம்:

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் காலை 9 மணி முதல் 11 மணி வரை ராஜீவ் நகர், அழகேசபுரம் (அங்கன்வாடி மையம்), எஸ்.எஸ்.மாணிக்கபுரம், வள்ளிநாயகபுரம், வண்ணார் 4-வது தெரு (மாநகராட்சி பள்ளி) ஆகிய பகுதிகளிலும், காலை 11 மணி முதல் 1 மணி வரை ஆசிரியர் காலனி 2-வது தெரு, செல்வவிநாயகபுரம் (பத்திரகாளியம்மன் கோயில் அருகில்), பூபால்ராயபுரம் 2-வது தெரு, லெவிஞ்சிபுரம் (அங்கன்வாடி மையம்), எஸ்.பி.ஜி. கோயில் தெரு பகுதிகளிலும், பகல் 2 மணி முதல் 4 மணி வரை சின்னமணிநகர் (அங்கன்வாடி மையம்), போல்பேட்டை கிழக்கு (முருகன் ஹால் அருகில்), முத்துகிருஷ்ணாபுரம் 2-வது தெரு, கரிக்குளம் காலனி (அங்கன்வாடி மையம்), போல்டன்புரம் 3-வது தெரு (அங்கன்வாடி மையம்) ஆகிய பகுதிகளிலும் காய்ச்சல் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

நகராட்சிகள்

ஊராட்சிகள்

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறைக்கு 1077 கட்டணமில்லா தொலைபேசி எண் மூலமும், 0461-2340101 என்ற தொலைபேசி எண்ணிலும், 9486454714 என்ற செல்போன் எண்ணிலும் பொதுமக்கள் கரோனா நோய்த் தொற்று குறித்த தகவல்களை கேட்டு பெறலாம் என, மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT