Regional03

கோவில்பட்டியில் 6 மணி நேரம் மின்தடை :

செய்திப்பிரிவு

கோவில்பட்டி: கோவில்பட்டி துணை மின்நிலையத்தில் நேற்று காலைதிடீர் பழுது ஏற்பட்டது. இதன் காரணமாக காலை 6.40 மணியில் இருந்து நகர் மற்றும் இனாம்மணியாச்சி ஊராட்சி பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது. மின்வாரிய ஊழியர்கள் பழுதை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். நேற்று முழு ஊரடங்கு என்பதால் வீட்டில் இருந்தமக்கள் மின்தடையால் சிரமமடைந்தனர். வெயிலின் தாக்கம் அதிகமாகஇருந்ததால், புழுக்கத்தால் அவதியுற்றனர். மதியம் சுமார் 1.30 மணியளவில் பழுது சரிசெய்யப்பட்டு மின்சாரம் சீராக விநியோகிக்கப்பட்டது.

SCROLL FOR NEXT