தென்காசியில் ஆதரவற்றோருக்கு காவல்துறையினர் உணவு வழங்கினர். 
Regional03

ஊரடங்கு நாளில் உணவின்றி தவித்த ஆதரவற்றோர் : அரசின் கருணை கிடைக்குமா?

செய்திப்பிரிவு

ஊரடங்கு நாளில் பல்வேறு இடங்களில் ஆதரவற்றோர் பசியால் வாடினர். அவர்களுக்கு அரசின் ஆதரவு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

கரோனா பரவல் அதிகரித்து வருவதால் தமிழகத்தில் நேற்றுமுழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. முழு ஊரடங்கு நாளில் பல்வேறு இடங்களில் ஆதரவற்றோர் உணவு கிடைக்காமல் அவதிப்பட்டனர். சில இடங்களில் தன்னார்வலர்களும், சில இடங்களில் ரோந்துப் பணியில் ஈடுபட்ட போலீஸாரும் அவர்களுக்கு உதவிக்கரம் நீட்டினர்.

கரோனா தொற்று முதல் அலை பரவியபோது ஊரடங்கால் பாதிக்கப்பட்ட ஆதரவற்றோருக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் உதவி செய்யப்பட்டது.

காப்பகங்களில் ஆதரவற்றோர் தங்க வைக்கப்பட்டு, அவர்களுக்கு தினமும் உணவு வழங்கப்பட்டது.

ஆனால், இந்த முறை அது போன்ற ஏற்பாடுகள் செய்யப் படவில்லை.

எனவே, ஆதரவற்றோருக்கு உதவிக்கரம் நீட்ட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தன்னார்வலர்கள் ஒத்துழைப்புடன் தேவையான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

SCROLL FOR NEXT