Regional02

பருவதமலை கிரிவலம் செல்ல தடை :

செய்திப்பிரிவு

கலசப்பாக்கம் அடுத்த தென் மகாதேவமங்கலம் கிராமத்தில் உள்ள பருவத மலையை கிரிவலம் செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

தி.மலை அண்ணாமலையார் கோயிலில் சித்ரா பவுர்ணமி விழா வெகு விமரிசையாக நடைபெறும். கரோனா கட்டுப்பாட்டால் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

மேலும், சித்ரா பவுர்ணமிக்கு அண்ணாமலையை இன்றிரவு கிரிவலம் செல்ல பக்தர்களுக்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. இதேபோல், கலசப்பாக்கம் அருகே உள்ள பருவதமலையில் கிரிவலம் செல்லவும் தடை விதிக்கப் பட்டுள்ளது.

SCROLL FOR NEXT