பாளையங்கோட்டை மத்திய சிறை வளாகத்தில் கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் திருநெல்வேலி மாவட்டம் மூன்றடைப்பு அருகேயுள்ள வாகைகுளத்தை சேர்ந்த பாபநாசம் மகன் முத்துமனோ கடந்த 2 நாட்களுக்கு முன்பு கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக பெருமாள்புரம் போலீஸார் 7 பேர் மீது வழக்கு பதிந்துள்ளனர்.
இந்நிலையில் சிறைக்குள் கொலை நடைபெற்றுள்ளதால் அப்போது பணியில் இருந்த துணை சிறை அலுவலர் சிவனு, உதவி சிறை அலுவலர்கள் சங்கரசுப்பு பிள்ளை, கங்காராஜன், ஆனந்தராஜ், முதல் தலைமை காவலர் வடிவேல் முருகையா, சிறைக் காவலர் சாம் ஆல்பர்ட் ஆகிய 6 பேரை பணியிடை நீக்கம் செய்து சிறைத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.