சிவகங்கை மாவட்டம், திருப்பத் தூர், சிவகங்கை ஆகிய இடங் களில் முகக் கவசம் அணியாத கடை உரிமையாளர்களுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் லதா அபராதம் விதித்தார்.
சிவகங்கை மாவட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் லதா திருப்பத்தூர், சிவகங்கை பகுதிகளில் மளிகைக் கடைகள், ஜவுளிக்கடைகள், வணிக வளாகங்கள், பேக்கரிகள், ஜூஸ் கடைகள், சந்தைகளில் நேற்று ஆய்வு செய்தார்.
அப்போது முகக் கவசம் அணியாமல் இருந்த உரிமை யாளர், பணியாளர்களுக்கு ரூ.30 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்பட்டு வசூலிக்கப் பட்டது. மேலும் அவர் முகக் கவசம் அணியவும், சமூக இடைவெளியை பின்பற்றவும் வலியுறுத்தினார்.