Regional03

விருதுநகர் அருகே : மது குடித்த காவலர் உயிரிழப்பு :

செய்திப்பிரிவு

செல்வகுமார் அடிக்கடி மது குடித்துவிட்டு வருவதை முத்துலட்சுமி கண்டித்துள்ளார். மேலும் குடிப்பழக்கத்தால் செல்வகுமார் கடந்த 4 மாதங்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டுள்ளார். அப்போது மது குடிப்பதை குறைத்துக் கொள்ளுங்கள் என முத்துலட்சுமி கூறியுள்ளார். இதனால் அவரிடம் சண்டையிட்டு செல்வகுமார் தனது தாய் வீட்டுக்குச் சென்றுள்ளார்.

இந்நிலையில், விருதுநகர்- சிவகாசி சாலையில் பஜார் காவல் நிலையம் அருகே உள்ள அரசு டாஸ்மாக் கடை அருகில் காவலர் செல்வகுமார் இறந்து கிடந்தார். இதைப் பார்த்த உறவினர் ஒருவர் ஆம்புலன்ஸ் மூலம் சடலத்தை விருதுநகர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார். இது குறித்து ஆமத்தூர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT