Regional02

ஈரோடு மாவட்டத்துக்கு 150 ஆக்சிஜன் சிலிண்டர் வருகை :

செய்திப்பிரிவு

ஈரோடு மாவட்டத்துக்கு அவசர தேவைகளுக்காக நேற்று 150 ஆக்சிஜன் சிலிண்டர்கள் வந்துள்ளதாக, மாவட்ட சுகாதாரத் துறையினர் தெரிவித்தனர்.

தமிழகத்தில் கரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனால் ஆக்சிஜன் தேவையும் அதிகரித்துள்ளது. இச்சூழலில் ஈரோடு மாவட்டத்தின் அவசர தேவைகளுக்காக நேற்று 150 ஆக்சிஜன் சிலிண்டர்கள் வந்தன.

ஆக்சிஜன் சிலிண்டர்கள் கரோனா மருத்துவமனைகள் மட்டுமின்றி தனியார் கல்லூரி, பள்ளிகள், திருமண மண்டபங்கள் என 11 இடங்களில் செயல்பட்டு வரும் தனிமைப்படுத்துதல் முகாம்களிலும் சிலிண்டர்களை இருப்பு வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, என மாவட்ட சுகாதாரத் துறையினர் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT