Regional03

விபத்தில் முதியவர் உயிரிழப்பு :

செய்திப்பிரிவு

சேலத்தில் இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதியதில், முதியவர் உயிரிழந்தார்.

சேலம் மாவட்டம் மேட்டுப்பட்டி எம்.பெருமாபாளையத்தைச் சேர்ந்தவர் எலக்ட்ரீஷியன் மனோகரன் (55). இவர் நேற்று முன்தினம் இரவு உடையாப்பட்டி வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகே இருசக்கர வாகனத்தில் சாலையை கடக்க முயன்றார்.

அப்போது, தருமபுரியில் இருந்து சேலம் நோக்கி செங்கல் லோடு ஏற்றி வந்த லாரி, இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில், மனோகரன் பலத்த காயம் அடைந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு, சேலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால், மருத்துவமனைக்கு வரும் வழியில் அவர் உயிரிழந்தார். இதுதொடர்பாக அம்மாப்பேட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT