Regional03

இறப்பிலும் இணை பிரியாத தம்பதியர் :

செய்திப்பிரிவு

தஞ்சாவூர் அருகே மனைவி இறந்த சில மணி நேரத்தில், கணவரும் உயிரிழந்தது உறவினர்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் அம்மன்பேட்டை வெள்ளாளர் தெருவைச் சேர்ந்தவர் திருவேங் கடம்(80). திருவையாறில் அல்வா கடை நடத்தி வந்தார். இவரது மனைவி அம்சவள்ளி(75). இவர்களுக்கு 5 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர். கடைசி மகன் ராஜா தவிர அனைவருக்கும் திருமணமாகி வெவ்வேறு ஊர்களில் வசித்து வருகின்றனர். ராஜா பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்நிலையில், வயது முதிர்வின் காரணமாக அம்சவள்ளி நேற்று முன்தினம் மாலை உயிரிழந்தார். அவர் இறந்து சில மணிநேரம் கழித்து, திருவேங்கடமும் மயங்கி விழுந்து உயிரிழந்தார். இதையடுத்து, கணவன், மனைவி இருவரின் உடல்களும் நேற்று மதியம் தகனம் செய்யப்பட்டன. வாழ்வில் இணைபிரியாமல் இருந்து வந்த தம்பதி யர், ஒரே நாளில் உயிரிழந்தது உறவினர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது.

SCROLL FOR NEXT