தமிழக அரசு, நீதிமன்றத்தின் மேற்பார்வையில் ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜனை உற்பத்தி செய்ய வேண்டும் என இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் வலியுறுத்தியுள்ளார்.
தஞ்சாவூரில் செய்தியாளர் களிடம் நேற்று அவர் கூறியது: இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில் களை பக்தர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என வலியுறுத்தி தஞ்சாவூரில் மே 8-ம் தேதி மடாதிபதிகள், ஆதீனங்கள், இந்து சமய தலைவர்கள் பங்கேற்கும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற உள்ளது. இதற்கான அனுமதி கேட்டு, காவல் துறையில் மனு கொடுக்கப்பட்டுள்ளது.
கிறிஸ்தவர்கள், முஸ்லிம் களின் சொத்துகள் அனைத் தும், அவர்களிடமே இருக்கும் பட்சத்தில், கோயில்களை மட்டும் அரசு கட்டுப்பாட்டில் வைத்தி ருப்பது எந்த விதத்தில் நியாயம்?
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் தமிழக அரசு மற்றும் நீதிமன்றத்தின் மேற்பார்வையில், அவசரத் தேவையான ஆக்சிஜனை உற்பத்தி செய்ய வேண்டும் என்றார்.