பாளையங்கோட்டையில் ஆயுதப்படை வளாகத்தில் திருநெல்வேலி மாநகராட்சி சார்பில் சிறப்பு மருத்துவ முகாம் நேற்று நடத்தப்பட்டது. இந்த முகாமில் ஆயுதப்படை போலீஸ் அதிகாரிகள், போலீஸார் உள்ளிட்டோருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. படம்: மு.லெட்சுமி அருண் 
Regional01

நெல்லையில் போக்குவரத்து ஊழியர்கள் - ஆயுதப்படை காவலர்களுக்கு கரோனா பரிசோதனை :

செய்திப்பிரிவு

திருநெல்வேலியில் ஆயுதப்படை காவலர்கள் மற்றும் போக்கு வரத்து ஊழியர்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள் ளப்பட்டது.

திருநெல்வேலி மாவட்டத்தில் கரோனா பரவலை கட்டுப்படுத்த பரிசோதனைகளை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. பாளை யங்கோட்டையில் உள்ள ஆயுதப்படை வளாகத்தில் திருநெல்வேலி மாநகராட்சி சார்பில் சிறப்புமருத்துவ முகாம் நேற்று நடத்தப்பட்டது. முகாமில் ஆயுதப்படை போலீஸ் அதிகாரிகள், போலீஸார் உள்ளிட்டோருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதுபோல் திருநெல்வேலி வண்ணார்பேட்டையிலுள்ள அரசு போக்குவரத்துக் கழக பணிமனையில் பணியாற்றும் 400-க்கும் மேற்பட்டவர்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளவும், தடுப்பூசி செலுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி ஊழியர்களிடம் நேற்று சளி மாதிரி சேகரிக்கப்பட்டது.

SCROLL FOR NEXT