Regional01

கரோனாவை தடுப்பதில் - மத்திய, மாநில அரசுகள் தோல்வி : இயக்குநர் கவுதமன் குற்றச்சாட்டு

செய்திப்பிரிவு

‘‘கரோனாவை தடுப்பதில் மத்திய, மாநில அரசுகள் தோல்வியடைந்து விட்டன’’ என்று தமிழ்ப் பேரரசு கட்சி பொதுச் செயலாளரும், திரைப்பட இயக்குநருமான கவுதமன் கூறினார்.

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவிலில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

மக்களுக்கு உரிய மருத்துவத்தை கொடுத்து கரோனாவில் இருந்து காக்க மத்திய அரசு தவறிவிட்டது. தூத்துக்குடியில் வேதாந்தா நிறுவனம் ஆக்சிஜன் தயாரிக்க ஒப்புதல் அளிக்கக் கூடாது. மக்கள் உயிரைக் கொடுத்து போராடி வேதாந்தா நிறுவனத்தை மூடியுள்ளனர்.

ஸ்டெர்லைட் நிறுவனத்தை திறந்து ஆக்ஸிஜன் தயாரிப்பதை தமிழக மக்களின் மீது தொடுக்கப்படும் யுத்தமாகத்தான் நாங்கள் பார்க்கிறோம்.

நடிகர் விவேக் ஒரு முறைகூடஇதய சிகிச்சைக்காக மருத்துவரிடம் சென்றதில்லை. ஆனால், தடுப்பூசி போட்ட மறு நாளே உயிரிழந்துள்ளார்.

விவேக் மரணத்துக்கு பின்னர் தமிழக மக்கள் தடுப்பூசி போட பயப்படுகிறார்கள். மக்கள் அச்சத்தை போக்க மத்திய, மாநில அரசுகள் எதுவும் செய்யவில்லை.

6 மாதத்துக்கு முன்பு இறந்தவருக்கு கரோனா பரிசோதனை முடிவை சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. கரோனாவை தடுப்பதில்மத்திய, மாநில அரசுகள் தோல்வியடைந்து விட்டன. 234 தொகுதிகளிலும் பணம் விநியோகிக்கப்பட் டுள்ளது. இதைத் தடுக்கதேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவில்லை என்றரர்.

SCROLL FOR NEXT