Regional01

கரோனா பரவலால் ஆசிரியர்களுக்கு - விடுமுறை அளிக்க கோரிக்கை :

செய்திப்பிரிவு

தமிழ்நாடு ஆரம்பப் பள்ளிஆசிரியர் கூட்டணி தென்காசி மாவட்டத் தலைவர் ரமேஷ், செயலாளர் மாரிமுத்து, பொருளாளர்மணிமேகலை, மாநில செயற்குழு உறுப்பினர் ராஜ்குமார், பொதுக்குழு உறுப்பினர்கள் துரைராஜ், மாடசாமி உள்ளிட்டோர் சங்கரன்கோவில் மாவட்டகல்வி அலுவலர் ராமசுப்புவிடம் மனு அளித்தனர்.

அதில், “தேர்வு நிலை, சிறப்புநிலை, பணி வரன்முறை, உண்மைத்தன்மை வேண்டி பெறப்படும் கோப்புகளை விரைந்துமுடித்து ஆணை வழங்கவேண்டும். 25 ஆண்டுகள் அப்பழுக்கற்ற முறையில் பணி செய்த ஆசிரியர்களுக்கு அரசு வழங்கும் சிறப்பு நிதி ரூ.2,000, பாராட்டு சான்றுகள் வேண்டி விண்ணப்பிக்கும் ஆசிரியர்களுக்கு உரிய நிதி ஒதுக்கீடுசெய்ய அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும். தற்போது நாடுமுழுவதும் கரோனா அதிகரித்துவரும் நிலையில் ஆசிரியர்கள் பள்ளிக்கு சென்று வருவதால் தொற்றால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, ஆசிரியர்களுக்கு விடுமுறை அளிக்க அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும்” என்று கூறியுள்ளனர்.

SCROLL FOR NEXT