திருநெல்வேலியில் நடிகர் விவேக் மறைவையொட்டி இரங்கல் கூட்டம் நடத்தப் பட்டது. காமதேனு மேட்ரிமோனி நிர்வாக இயக்குநர் து.அர்ஜு னன் தலைமை வகித்தார். சிவராம் கலைக்கூட இளம் ஓவியர் மகராஜன் வரைந்தநடிகர் விவேக் ஒவியத்துக்கு மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தப்பட்டது. சிட்டி எக்ஸ்னோரா செயலாளர் கோ.கணபதி சுப்பிரமணியன் கருத்துரை வழங்கினார்.