Regional02

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று முழு ஊரடங்கு - பாதுகாப்பு பணியில் 750 காவல் துறையினர் : பொதுமக்கள் வெளியே வராமல் ஒத்துழைப்பு அளிக்க வேண்டுகோள்

செய்திப்பிரிவு

தி.மலை மாவட்டத்தில் இன்று முழு ஊரடங்கில் பாதுகாப்பு பணியில் 750 காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

தமிழக அரசு உத்தரவுபடி, தி.மலை மாவட்டத்தில் இன்று முழு ஊரடங்கு (ஞாயிற்றுக்கிழமை) அமல்படுத்தப்பட்டுள்ளது. வழக்க மான இரவு நேர ஊரடங்குடன், முழு நேர ஊரடங்கும் இணைந்து உள்ளது. இதனால், மாவட் டத்தில் 30 மணி நேரம் ஊரடங்கு அமலில் இருக்கும்.

இதன் எதிரொலியாக, தி.மலை,போளூர், ஆரணி, செய்யாறு, வந்தவாசி மற்றும் செங்கம் ஆகிய முக்கிய பேருந்து நிலையங்களில் மக்கள் கூட்டம் கணிசமாக இருந்தது. மாலை 6 மணிக்கு பிறகு, அரசு மற்றும் தனியார் பேருந்துகளின் இயக்கம் படிப்படியாக நிறுத்தப்பட்டது. இதனால், இரவு 8 மணிக்கு பிறகு பேருந்துகள் இல்லாமல் பேருந்து நிலையங்கள் வெறிச்சோடின.

இறைச்சி கடைகளில் கூட்டம்

இந்நிலையில், கரோனா தடுப்பு நடவடிக்கையாக ஒரு நாள் ஊரடங்கு அமலுக்கு வருவதை யொட்டி, இரவு 8 மணியில் இருந்து கடைகளை மூடி ஒத்துழைப்பு அளிக்குமாறு வணிகர்களை காவல்துறையினர் ஒலி பெருக்கி மூலமாக கேட்டுக் கொண்டார். இரவு 10 மணிக்கு பிறகு, சாலையில் நடமாடியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, எச்சரித்து அனுப்பப்பட்டனர்.

மேலும், ஊரடங்கு பாதுகாப்புப் பணியில் மாவட்டம் முழுவதும் 750-க்கும் மேற்பட்ட காவல் துறையினர் ஈடுபட்டுள்ளளனர். கரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கின்போது பொதுமக்கள் யாரும் வெளியே வர வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளனர்.

SCROLL FOR NEXT